ஏதோவொரு சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவின் தனியார் கப்பலொன்று ஆயுதங்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு பிடித்து வரப்பட்டிருக்கிறது..செய்தியின் வீடியோபதிவு தொலைக்காட்சிகளில் பார்த்தேன்..
பிடித்து வரப்பட்ட ஊழியர்கள் எதோ மியாமி,ஹவாயி,பாலே தீவுகளுக்கு சுற்றுலா வந்தது போல் மிகவும் ஹாயாக இருக்கிறார்கள்..
ஒருவர் முகத்திலும் எந்த கவலையும் இல்லை..
இதே அமெரிக்கா ..இங்கிலாந்து நாடுகளாய் இருந்தால் freeze..hold on ...don't move என என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் பயன்படுதப்பட்டு ..ஒவ்வொரு ஊழியரையும் பத்து போலிசார் விதம் .. சுற்றி நான்கு போர்கப்பலையும் மேலே பத்து போர்விமானங்களையும் முப்பது ஹெலிகாப்ட்டர் சூழ அக்கப்பலை மண்டியிட வைக்கும் காட்சியென அந்நாடுகளில் உள்ள எல்லா டிவி சேனல்களிலும் Breaking news என உலகத்தையே அல்லோல்கல படுத்தியிருப்பர்கள்..( யார் யாருக்கு என்னன்ன ஹாலிவுட் காட்சிகள் நினைவுக்கு வருகின்றனவோ திரையிட்டுக்கொள்க).
பல்வேறு சேனல்கள் அதை முழுமையாக காட்சிபடுத்தி ஆவணமாக வெளியிடும். அவர்கள் சினிமாக்களும் செய்திதொலைக்காட்சிகளும் தொலைக்காட்சி தொடர்களும் இந்த அடிப்படையிலேயே இயங்குகின்றன. காரணம் இந்நாடுகளை பார்த்து உலகம் பயப்படவேண்டும் அல்லது இப்படி செய்ய யாரும் துணியக்கூடாது என்ற எண்ணம்
நம் நாட்டில் அப்படி இல்லை. வழக்கு நடத்துவதில் பல சிக்கலான நடைமுறைகள் இருக்கக்கூடும். இதுபோன்ற முக்கியமான விசாரணைகள் ஒரு அமைப்பு மட்டுமே விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். நமது விசாரணை நடைமுறைகள் மறு பரீசலனைக்குரியவைகள்..
இந்த விவகாரத்தில் தற்போது எல்லா தூதரகங்களும் முழுவீச்சில் இயங்கிக்கொண்டிருக்கும் ..சில நாட்களில் விசாரணைக்கு பிறகு வழக்கம்போல் முழு மரியாதையோடு சாதாரணமாய் அவர்கள் அனுப்பப்டுவார்கள்...
incredible India என்பது இதுதானோ............


No comments:
Post a Comment